சற்சொரூபவதி நாதன் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர்.

சற்சொரூபவதி நாதன் (மார்ச் 6, 1937 – மே 4, 2017)

இலங்கையில் 40 ஆண்டு காலம்
பெண் அறிவிப்பாளர்களில் செந்தில்
மயில்வாகனத்தின் பின்னர் சற்சொரூபவதி நாதனின் வருகை அமைந்தது, பல மாற்றங்களை செய்தி வாசிப்புத்துரை சார்ந்த பல முன்னேற்றங்களைக் கண்டது .ஆனந்தி சூரியப் பிரஹாசம் ,புவன லோஜினி வேலுப்பிள்ளை ,யோகா தில்லைநாதன் ,கோகிலா சிவராஜா ஆகியோர் சர்சொரூபவதியின் பின்னரே பணியாற்றத் தொடங்கினர்.

பின்னர் ராஜேஸ்வரி சண்முகம் ,விசாலாட்சி ஹமீது ,விமலேஸ்வரி இந்திரன் ,ஆமீனா பேகம் என்று மெருகேற த் தொடங்கியது .ஆண்அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் களமாடிய செய்தி துறைக்குள் நுழைந்து தனக்கென்று ஒரு தனிச் சிறப்பை ஏற்படுத்தியவர் இவரது ஆங்கில அறிவு சகலஅறிவிப்பாளரை விட செறிவானது ,இவரது சொல்லாட்சி உச்சரிப்புக்கு இவருக்கு நிகர் இவரே.

இந்த இடத்தில் மிகவும் முக்கியமானது சானா வின் பாசறையில் வளர்ந்தவர் லண்டன் கந்தயாவில் இவரது நடிப்பு அபாரம் .இவரது மேடைப் பேச்சு எல்லோரையும் கவரும் .நோஞ்சான் உடம்புக்குள் ஆணின் கம்பீரம் ,அப்படி தெளிவான மனோபாவம் .எனது கருத்து எனது பார்வையில் இது தான் இவரது திருமணத்துக்கு பாதகமானதோ ..என்று நினைத்திருக்கிறேன் .எனது இந்தக் கருத்தை சொந்தக் கருத்தாகவே கொள்ளவேண்டும் .இவரது மேடைப் பேச்சை செவி மடுத்த தமிழ் தேசிய சேவையின் பிரதான பொறுப்பாளர் கே எஸ் நடராசா வைக் கவர்ந்து விட வானொலி அறிவிப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் .அறிவிப்பாளராக சேவை செய்தபொழுதும் மகளிர் சஞ்சிகை ,உரைச்சித்திரம் ,நேர்காணல்கள் (பேட்டி என்பது தவறு )கல்விச்சேவை என்று இன்னோரன்ன பணிகளில் அகலக் கால் பதித்து நிமிர்ந்து நின்றவர் ..

இவரது ஆங்கிலப் புலமை காரணமாக ஆங்கில நிகழ்ச்சிப் பணிப்பாள ராகத் திகழ்ந்தவர் .இவர் கற்ற இந்து மகளிர் கல்லூரியின் மாணவ சங்கத்தின் ச்தாபகத்தின்தலிவியாக பலகாலம் இருந்தவர் .அண்மையில் நான் குரும்பசிட்டிக்கு சென்றபொழுது உடுப்பிட்டிக்கும் சென்று வந்தேன் ,அங்கெ சர்சுரூபவதி பற்றி பலரிடம் வினவினேன் .அநேகமான பேருக்கு சினிமா நடிகர்களை தெரிந்த அளவுக்கு இவரை தெரிந்திருக்கவில்லை .ஏன் இந்து மகளிர் கல்லூரியில் கூட இவரைப் பற்றி தெளிவின்மையை உணர முடிந்தது(ஒரு சில பேரை வினவினேன் )இவரினை பக்தியுடன் கூடிய அன்புடன் B .H அப்துல் ஹமீது நேசமாக மதித்தார் .அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த சிறிசேன மிகவும் கவலையுடன் கூறியது என்னவென்றால் ..உண்டா சர்வதேச விருதைப் பெற்றுக் கொண்ட சற்சொரூபவதி எமது நாடிற்கு பெருமை சேர்த்தவர் என்றார் .

அந்த அளவுக்கு சகலமக்களாலும் போற்றப் படுபவர் நான் இந்தப் பதிவுகளை ஏன் செய்கிறேன் என்றால் யாரும் முறையாக அல்லது முறையோடு ஆவணப்படுத்துதல் இல்லை .தமிழன் எதையும் எளிதாக மறந்து விடுகின்ற பழக்கத்தில் இன்றைய நூற்றாண்டுகளில் இருக்கின்றான் இலங்கையின் செய்தித்துறை வரலாற்றில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதனின் மறைவு, ஒலிபரப்புத்துறையில் ஈடு செய்ய முடியாததென்றுஅன்றைய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்சற்சொரூபவதி நாதனின்ம றைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர்.

செய்திகள் வாசிப்பில் உச்ச புகழைப் பெற்றிருந்த அவர்; கலை, கலாசார விடயங்களிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். சமய பக்தராகவும் இருந்தார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றிய காலங்களில் நன்மதிப்புடனும் சேவை மனப்பாங்குடனும் செயற்பட்டவர். செய்திகள் வாசிப்பில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவரது கணீரென்ற குரலை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் உருவாகியிருந்தது.சற்சொரூபவதி நாதனின் இனிமையான குரல் காற்றிலே பரவி வரும்போது, ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றது என்ற நிலையே ஒரு காலத்தில் இருந்தது. நாட்டு நடப்புக்களை அறிவதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தவிர எந்த விதமான ஊடகங்களும் இல்லாத அந்த கால கட்டத்தில் சற்சொரூபவதி நாதனின் செய்தி வாசிப்பில் தனியானதொரு பாணி இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சிறந்த பன்முக ஆளுமை படைத்த ஒருவரை இன்று இழந்து தவிக்கின்றது. அன்னாரின் குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்என்று ரிஷாட் பதியுதீன் குறிப்பிடிருந்தார் ஒலிபரப்புத் துறைக்குள் நுழையும் தமிழ், முஸ்லிம் அறிவிப்பாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை பலரும் இன்று நன்றியுடன் நினைவு கூருகின்றனர்அவர்களுடன் நாமும் நினைவு கூருவோம்

உண்டாவிருது முதலில் பெற்றவர்திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து ‘உண்டா’ விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சற்சொரூபவதியே ஆவார் இவர் சிறந்த ஒலிபரப்பாளருக்கான ‘ஜனாபதி விருதினையும்’ பெற்றவர்.சென்னைப் பல்கலைக் கழக முதலாவது பட்டதாரி C.Y. தாமோதரம் பிள்ளைஎன்பதை அறிவீர்கள் (இவர் பற்றிய எனது பழைய பதிவுகளை பார்க்கவும்)அவ்வரிசையில் ‘சற்சொரூபவதி நாதன்’ அவர்களும் அங்கேயே பட்டம் பெற்றவர்

Leave A Reply

Your email address will not be published.