ரஷியா-உக்ரைன் இடையே காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது காணொலி காட்சி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ரஷிய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி பேச்சுவார்த்தையின் படத்தை வெளியிட்டார்.
ரஷியா மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடந்த கடைசி சந்திப்பிற்கு பின் மூன்று நாட்கள் கழித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின்போது, ரஷிய தரப்பில், “கிரிமியா மற்றும் டான்பாஸ் பற்றிய ரஷியாவின் நிலைப்பாடுகள் மாறாமல் அதே நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.