இலங்கை மின்சார சபை தொடர்பான முழுமையான ஒரு பார்வை.

இலங்கை மின்சாரசபையானது ஆண்டுக்கு சுமார் 8000 கோடி நட்டமடையும் ஒரு நிறுவனமாக தற்பொழுது இருந்து வருகிறது. இவ் விடையம் பலருக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். இவ்வாறான ஒரு நிலை ஏன் வந்தது என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஆரய வேண்டும். நிர்வாகங்களிலும் நாம் அரசியலை முன்னெடுப்பதாலையே இந்த அவல நிலையில் நம் நாடு இருக்கிறது என்பதே என்னுடைய நீண்டகால வாதம்.

2010க்கு முன்னர் இலங்கையில் சுமார் 65விகித மக்களே மின்சாரத்தை பயன்படுத்தி வந்தனர். யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு தரவுகள் அப்பொழுது சேகரிக்கப்படுவதில்லை. யுத்தம் நிறைவடைந்த பின்னர் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட 2015ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நாட்டின் 92விகித மக்கள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களாக மாறியிருந்தனர்.

2011ம் ஆண்டு வரை சுமார் 60விகித மின்சாரத்தை பெற்றோலியத்தில் இருந்தே உற்பத்தி செய்து வந்துள்ளோம். அதிக விலைக்கு பெற்றுக்கொண்டு குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்பனை செய்துவந்துள்ளது. பெற்றோலிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை அடிப்படையிலும் கடனடிப்படையிலும் பெற்றோலியத்தை வழங்குவதல் போன்ற நடவடிக்கையால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்நோக்கும் ஒரு நிறுவனமாக இலங்கை மின்சாரசபை இருந்தது. 2011ம் ஆண்டு மட்டும் 13,800கோடி நட்டமடைந்த ஒரு நிறுவனமாக இருந்தது. https://ceb.lk/front_img/img_reports/1532060257CEB_Annual_Report_2011_(English).pdf

140கோடி டொலர் கடன் அடிப்படையில் (15,000கோடி ரூபாய்) செலவில் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டது. இதன் பின் பெற்றோலியத்தில் இருந்து மின் உற்பத்தி செய்யவேண்டிய தேவையில் இருந்து இலங்கை கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பித்தது. இதன் விளைவாக இலங்கை மின்சாரத்துறை ஆண்டுக்கு 2,000 கோடி லாபமீட்டும் நிறுவனமாக முதல்முறையாக மாறியது. அத்துடன் தடையில்லா மின்சாரத்தை வழங்கமுடிந்தது. பெற்றோலிய மின் தேவை 10%மாக குறைவடைந்தது. https://ceb.lk/front_img/img_reports/1532057445(3)_CEB_Annual_Report_2013_(English).pdf

தொடர்ச்சியாக லாபமீட்டும் நிறுவனமாக மாறிய இலங்கை மின்சாரசபை 2015ம் ஆண்டும் சுமார் 2000 கோடி ரூபாய் இலாபமீட்டியது. https://ceb.lk/front_img/img_reports/1531992515CEB-Annual_Report_2015_(English).pdf

நமது நாட்டின் மின் தேவையானது 4-7 விகிதத்தால் ஆண்டுக்கு அதிகரிக்கிறது. நமது உற்பத்தியையும் ஆண்டுக்கு சுமார் 7 விகிதத்தால் அதிகரிக்கவேண்டிய தேவை இருந்தது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் தேவைப்படும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் பல திட்டங்கள் 2013ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

உமா ஓயா திட்டம் பலருக்கு நினைவிருக்கலாம். 2015ம் ஆண்டு தேர்தலில் இந்த திட்டம் மிகவும் பேசப்பட்டது. வாக்குகளுக்கு ஆசைப்பட்டு திட்டத்தினை பிழையாக கொண்டு சென்றதனால் அந்த திட்டத்தை ஆட்சிக்கு வந்த பின் 3 வருடங்களாக நிறுத்தி வைத்திருக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். 2019ம் ஆண்டு முடியவேண்டிய இந்த திட்டம் இன்றளவிலும் முடிவடையாத நிலையில் இருக்கிறது. இந்த திட்டம் சரியான நேரத்தில் முடிக்கப்பட்டு இருந்தால் 130-MW இன்று நாட்டிற்கு கிடைத்திருக்கும்.
https://cecb.lk/project/on%20going%20projects/Hydropower/Uma%20oya%20Project.html

Kithulgala திட்டம் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 35 MW நீர் மின் உற்பத்தி செய்யக்கூடிய இந்த திட்டத்தையும் இடைநிறுத்தி காலதாமதம் செய்தனர். https://cecb.lk/project/on%20going%20projects/Hydropower/Broadland%20Project.html

சாம்பூர் அனல் மின் நிலையம் இந்தியாவின் நிதி பங்களிப்பில் உருவாக்கப்பட இருந்தது. அத்தனையும் அரசியல் ஆதாயங்களுக்காக போராடி நிறுத்திவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் வேறு எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. 500MW உற்பத்தி நிலையமாக இது உருவாக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின் உற்பத்தி அதிகரிக்கப்படாமையாலும், ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டதாலும் மின் தேவையை சமாளிக்க முடியாமல் பல இடர்பாடுகள் 2016ம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகிவிட்டது. நாடு முழுவதும் மின் தடை உருவானதும் மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட கோலாறேயாகும். அது தொடர்பாக 2016ம் ஆண்டு நான் பதிவு செய்த ஒரு பதிவை காணலாம். https://www.facebook.com/search/posts/?q=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

தனியார் கம்பெனிகளில் இருந்து பெட்ரோலிய உற்பத்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பெறுவதால் ஆண்டுக்கு சுமார் 20,000 மில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொள்கிறோம். இது தொடர்பான ஒரு பதிவையும் நான் 2017ம் ஆண்டு பதிவேற்றியிருந்தேன். https://www.facebook.com/photo/?fbid=1653464351393621&set=a.500818609991540

2016ம் ஆண்டுக்கு பின்னர் பாரிய நட்டத்தை சந்தித்தது இலங்கை மின்சாரத்துறை
2016ம் ஆண்டு – 1,445 கோடி நட்டம்
2017ம் ஆண்டு – 4,730 கோடி நட்டம்
https://ceb.lk/front_img/img_reports/1605768575CEB_Annual_Report_2017.pdf
2018ம் ஆண்டு – 3,450 கோடி நட்டம்
2019ம் ஆண்டு – 8,500 கோடி நட்டம்.
https://ceb.lk/front_img/img_reports/162849515303_CEB_English_2019_AR.pdf

இலாபத்துடன் இயங்கிய ஒரு நிறுவனம் மொத்தமாக 18,125 கோடி நட்டமடைந்துள்ளது. நிர்வாகம் சார்ந்த அறிவின்மையால் நம் மக்கள் முன்னெடுத்த அரசியல் நமமை இந்த நிலைக்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆரம்பிக்கப்பட்ட நீர் மின் நிலையமும் அனல் மின் நிலையமும் திறக்கப்பட்டு இருந்தால் இன்று மின்சார பிரச்சனையும் இல்லை சுமார் 20,000கோடி நட்டமடைந்திருக்கவும் தேவையில்லை. இந்த கடனை சரி செய்வதற்கு வெளிநாடுகளில் மேலதிக கடன்வேண்ட வேண்டிய தேவையும் வந்திருக்காது.

மஹிந்த ராஜபக்ச அவர்களின் அரசிற்கு முன் இலங்கை மின்சாரசபை எவ்வாறு இருந்தது என்ற தகவலும் மிகவும் துயரமானதாகவே இருந்திருக்கிறது. 2002ம் ஆண்டு இலங்கை மின்சாரசபையை நடத்த முடியாமல் Lanka Electricity Company என்று தனி ஒரு அலகை இலங்கை உருவாக்கியிருந்தது.

பெற்றோலில் மின்சாரத்தை உருவாக்கும் நிறுவனங்களுக்கு டீசலை வழங்க முடியாத சூழல் காணப்பட்டதால் இலங்கை பெட்ரோலிய நிறுவனத்தை இந்தியாவிற்கு சுமார் 20விகிதத்தை விற்பனை செய்தார் ரணில் விக்ரமசிங்க. அதன் பணம் Lanka Electricity Company நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டது.

https://www.dailymirror.lk/article/-Petrol-shortage-across-country-Who-fuelled-the-fuel-crisis–139961.html?fbclid=IwAR3HVbRtxOVCHb1zHBnURaImbk18GF8omd-UQVb2CMPsXHbfIuf3djk3Xm8

#2000ம் ஆண்டில் இருந்து பார்க்கையில் மேலுள்ள விடயங்களே நமது மின்சார சபையின் கடந்துவந்த பாதையாக இருக்கின்றது. இன்றைய மின்சார பிரச்னைக்கு குறைகூறி அரசியல் செய்துகொண்டு இருக்காமல், அடுத்தது என்ன செய்யலாம் என்பதை பற்றி பேசுவதே சரியான தீர்வாக இருக்கும்.

சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மூலம் 10விகித மின்சாரம் விரைவில் இணைக்கப்பட்டுவிடும். உமா ஓயா போன்ற திட்டங்களும் விரைவாக இணைக்கப்பட்டுவிடும். இதன் பிறகு மின்சார சபையின் நட்டம் கணிசமாக குறையும் என்று நம்புகிறேன்.

அத்துடன் 500MW அனல் மின் நிலையம் கட்டாயம் அவசியமானதாகிறது. ஏனெனில் 2025ம் ஆண்டளவில் 6,900க்கும் அதிகமான MW மின்சாரம் எமக்கு தேவைப்பாடாக இருக்க போகிறது. இப்பொழுதே அதனை நோக்கி செயல்படாமல் இருந்தால் இனிவரும் காலங்களிலும் மின்சாரப்பிரச்சனைகள் தொடரும்.

#குறிப்பு – நிர்வாகம் சார்ந்த அறிவும் தெளிவும் மக்கள் அறியாதவரை இந்த நாடு மேன்மைதங்கிய ஒரு நாடாக மாறமுடியாது. நிர்வாக ரீதியிலான தெளிவினை அரசியல் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு ஆராய்கின்ற பொழுதே உண்மையான தெளிவும், எதிர்வரும் காலங்களில் முன்னெடுத்துக்கவேண்டிய திட்டங்கள் பற்றிய விம்பமும் கிடைக்கப்பெறும்.

அனைத்திலும் அரசியல் என்பதும், விருப்பு வெறுப்பு அரசியல் என்பதே இலங்கையின் சாபக்கேடு. அந்த நிலை மாறினால் சுபீட்சம் கண்டிப்பாக பிறக்கும்

Leave A Reply

Your email address will not be published.