பாகிஸ்தானுக்கு எதிரான டி20: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது .

கேப்டன் பாபர் அசாம் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது . அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 46 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 55 ரன்கள் எடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.