இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்.

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு பல பார்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அதிக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மையம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் காயமடைந்த எட்டு பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களில் மூன்று பேர் தீவிரமான அல்லது ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல் அவிவ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய புனித இஸ்லாமிய மாதமான ரமலானுக்கு முன்னதாக பாலஸ்தீனிய நடத்திவரும் தொடர் தாக்குதல்களில் 11 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.