இரண்டாக உடைந்த சரக்கு விமானம்.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. குட்டி நாடான கோஸ்டாரிகா பெரும்பாலும் சுற்றுலாத் துறையை நம்பியே உள்ளது. கோஸ்டாரிகாவில் உள்ள விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது.

இதனைத்தொடர்ந்து சிறிது தூரம் ஓடு பாதையை விட்டு விலகி தரையில் பயணித்த விமானம் இரண்டாக உடைந்து நின்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.விபத்து ஏற்படும் போது, விமானத்தில் 2 பேர் மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.