போராட்டக் களம் சென்று பேராதரவு வழங்குங்கள்! இளைஞர்களிடம் சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள்.

“அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போராட்டக் களத்துக்கு அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆகவே, வடக்கு, கிழக்கிருந்து இளைஞர்கள் அங்கு சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும். எமது நிலைப்பாட்டை அங்கே தெரிவிக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.