மகிந்த , சுமந்திரன் சந்திப்பு : யாரை பதவி விலக்குவது? – கபில

மஹிந்தவும் களமிறங்கி ஆட்டத்தை தொடங்க காரணம் என்ன?

ஜனாதிபதி , பழைய அமைச்சர்களை தூக்கிவிட்டு இளம் அமைச்சர்களை பதவியில் அமர்த்தினார்.  உண்மையில் அங்கிருந்துதான் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடுமையான மோதல் ஆரம்பமானது.

மறுநாள் காலை ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணத்தின் போது அந்த மோதல் வெளிப்படையாக தெரிந்தது.  அமைச்சரவைப் பதவிப் பிரமாண நிகழ்வில் மகிந்த கலந்து கொள்ளவில்லை. இதுபோன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. இதன்படி, புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ,  அவர்கள் அனைவரையும் அலரிமாளிகைக்கு வரவழைத்த மஹிந்த, அவர்களுடன் கலந்துரையாடினார்.

சுமந்திரனை மகிந்த வரச் சொன்னார்!

தம்மை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதை ஏற்கனவே அறிந்திருந்த மஹிந்த ராஜபக்சவும் பதில் நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம் மஹிந்த உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  சந்திக்க முடியுமா என மஹிந்த கேட்டார். அப்போது சுமந்திரன், தான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வர உள்ளதாகவும், அங்கு வந்ததும்  சந்திக்கலாம் என்றும் கூறினார். எனினும், மஹிந்தவை அலரிமாளிகையில் சந்திக்க விருப்பம் இல்லை என சுமந்திரன் தெரிவித்தார்.

ராஜபக்ச அரசியல் முடிந்தது!
அதன்படி இருவருக்குமிடையில் கொழும்பில் குறிப்பிட்ட இடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண என்ன செய்ய முடியும் என மஹிந்த சுமந்திரனிடம் நேரடியாக கேட்டார். அதற்கு பதிலளித்த சுமந்திரன், இந்த நெருக்கடியை இப்போது தீர்க்க முடியாது என்றும், ராஜபக்ச அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது எனவும் கூறினார்.

‘இப்போது இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராஜபக்சே அரசியல் முடிந்துவிட்டது. இப்போது வெளியில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள்  ஓயவில்லை. உள்ளுக்குள் நடக்கும் கிளர்ச்சியும் ஓயவில்லை. சர்வதேச சமூகத்திடம் இருந்து கேள்விகள். எனவே, இனிவரும் எந்தவொரு ஜனாதிபதித் தேர்தலிலும்  இந்த நாட்டில் உள்ள எந்த ஒரு மனிதனும் மீண்டும் ஒரு ராஜபக்சவுக்கு வாக்களிக்க மாட்டான் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. இம்முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுமாயின் ஒரு நாள் ராஜபக்சவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என சுமந்திரன் மஹிந்தவிடம் தெரிவித்தார்.

சுமந்திரனின் ஆலோசனை!

மஹிந்த சுமந்திரனிடம், ஜனாதிபதியின் அதிகாரங்களை எவ்வாறு குறைக்க முடியும் என கேட்கப்பட்டார். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், முதற்கட்டமாக 20ஐ நீக்கிவிட்டு 19ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார். அப்போது பாராளுமன்றம் மற்றும் பிரதமருக்கு அதிக அதிகாரம் இருக்கும் எனவும், இவ்வாறு நிறைவேற்று அதிகாரங்களை குறைப்பதன் ஊடாக சர்வதேச நாணய நிதியம் மட்டுமன்றி ஏனைய நாடுகளின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இதன்படி நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் ஆலோசகைக்கு இணக்கம் தெரிவித்த மஹிந்த ,  அதனை அரசாங்கத்திற்குள் முன்னெடுத்துச் செல்லவும் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறும் பொறுப்பையும் சுமந்திரனிடம் ஒப்படைக்கவும் தீர்மானித்தார். சுமந்திரனும் ஒப்புக்கொண்டார்.

சுமந்திரன் சஜித்துடன் சந்திப்பு!

இதன்படி சுமந்திரன் முதலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார். நிறைவேற்று அதிகாரங்களை நீக்குவதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார் என்ற செய்தியை அவர் சஜித்திடம் தெரிவித்தார். அதற்கு சஜித் சம்மதித்தாலும் சில நிபந்தனைகளை முன்வைக்க நடவடிக்கை எடுத்தார்.

சஜித் எதிர்ப்பு!

‘நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பிரதான எதிர்க்கட்சி என்ற எமது நிலைப்பாடாகும். கூடுதலாக, நாட்டில் சில நேர்மறையான சீர்திருத்தங்களுக்காக நாட்டில் ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர். அந்த இளைஞர்களின் கோரிக்கைகளை அரசியலமைப்பிலும் சேர்க்க வேண்டும், ”என்று சஜித் கூறினார்.

அது நடக்க வேண்டும் ஆனால் தொடக்கமாக 20வது திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்றும் சுமந்திரன் கூறினார். ஆனால் அதற்கு சஜித் சம்மதிக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடுமாறு சுமந்திரனிடம்  சஜித் சொன்னார்.

– கபில

Leave A Reply

Your email address will not be published.