இந்தியாவின் 74 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்றது
இந்தியாவின் 74 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ் இந்திய துணைத் தூதுவராலயத்தில் இன்று காலை 9.30மணிக்கு இடம்பெற்றது.
தொடர்பாடல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரனால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு பிரதமரின் செய்தி வாசிக்கப்பட்டது.
மேலும் பாரதியார் பாடல்களுடன் கிந்திப் பாடல்களும் இசைக்கப்பட்டதுடன் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
கொரோனாகால சூழலில் மிக எளிமையாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















Comments are closed.