நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை மஹிந்த உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும்…

நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ,முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை தொடர்ந்து சர்வமத தலைவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அந்தநிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிடும் போதே ஓமல்பே சோபித தேரர் “பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடல் அமைதி வழி போராட்ட களத்தில் மேற்கொண்ட தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதன்படி நாட்டை யுத்தகளமாக மாற்றியதன் பொறுப்பை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டம் குறித்து ஜனாதிபதியிடம் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினோம்.

சம்பவம் தொடர்பில் முறையான மற்றும் துரிதகரமான விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

சம்பவ இடத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் வெறுக்கத்தக்கது. பொலிஸ்மா அதிபர் குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்சி சாரா பிரதமர் தலைமையில் 15 பேரை உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும், சிவில் தரப்பின் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய விசேட ஆலோசனை குழுவை ஸ்தாபிக்கவும் ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.