‘மொட்டு’ எம்.பிக்களுடன் ஜனாதிபதி நாளை பேச்சு.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகிய பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதன் ஓர் கட்டமாகப் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் நியமித்துள்ளார். இந்நிலையிலேயே ஜனாதிபதி நாளை மொட்டுக் கட்சி எம்.பிக்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட சுயாதீனக் கட்சிகளின் பிரதிநிதிகள், ரணிலுக்கு ஆதரவு வழங்கக்கூடும் என அறியமுடிகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்றம் வருவதற்காக, ‘மொட்டு’க் கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பிக்கள் மூவர், தமது பதவியைத் துறக்கத் தயாராகவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.