ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிடலாம் என கனவு கண்ட நபர் உயிரிழப்பு! நடந்தது என்ன? எச்சரிக்கை செய்தி

இந்தியாவில் ஒரே இரவில் பெரிய கோடீஸ்வரர் ஆகிவிடுவோம் என நினைத்த நபர் தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தூக்கு போட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

அவரின் உடலை கைப்பற்றிய பொலிசார் சந்தோஷ் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், சுஜாதா (மனைவி) ஒரு வருடம் கழித்து எல்லாம் சரியாகிவிடும்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

யாராவது பணம் கேட்டு வந்தால் அவர்களின் பெயரை எழுதி வைத்து கொள். இரண்டாண்டுகளில் பணத்தை கொடுத்துவிடலாம். என்னை போல யாரிடமும் கடன் வாங்காதே, விரைவில் உனக்கு மாதம் ரூ 30,000 மாதம் வருமானம் கிடைக்கும்.

என் சாவுக்கு நானே காரணம் என எழுதப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணையில், சந்தோஷ் ரூ 30 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி ஓன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்.

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த அவருக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டதால், பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தார்.

இந்த சூழலில் தான் துரதிர்ஷ்டவசமாக, அவர் தனது வாழ்க்கையை முடித்து கொண்டார் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.