க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு…

நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவது தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சாதாரண புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மேலும் ,இம்முறை 407129 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 110367 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 517496 பரீட்சார்த்திகள் இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.