விஜயதாச மற்றும் ரணிலின் 21வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறுத்திய ஜனாதிபதி

ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஷவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு வழி செய்யக் கூடிய , அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தை நாளை (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் , அதை நிறுத்துவதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் மொட்டுவின் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

21வது திருத்தச் சட்டம் சட்டமா அதிபர் ஊடாக சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரேரணையை முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரியிடம் ஆய்வுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் இந்த திருத்தங்களை அமுல்படுத்தவும் அமைச்சர்கள் முன்மொழிந்துள்ளனர்.

எவ்வாறாயினும், அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும் எனவும் , நாளைய அமைச்சரவையில் அது முன்வைக்கப்படும் எனவும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.