பெரிய திறமைசாலி..இந்த பையன விட்றவே விட்றாதீங்க; அட்வைஸ் கொடுக்கும் முன்னாள் வீரர் !!

அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட்டிற்கு ஆஸ்திரேலிய அணியில் விரைவில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கி மே மாத இறுதி வரை நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடருக்கு புதிய அணியான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களின் ஆதிக்கமே இந்த தொடரில் அதிகமாக இருந்தது. இதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் உலகின் வெளிச்சம் கிடைத்தது. உம்ரன் மாலிக், அர்ஸ்தீப் சிங் போன்ற சில வீரர்கள் இந்த தொடரின் மூலம் இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடர் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் நிறைவடைந்துவிட்டாலும் ஐபிஎல் தொடர் குறித்தான விவாதங்களும், பேச்சுக்களும் இன்னும் ஓய்ந்த பாடில்லை. முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த தொடரில் பங்கேற்ற வீரர்கள் இந்த தொடரின் மூலம் தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிராட் ஹாக், இளம் அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட்டிற்கு விரைவில் ஆஸ்திரேலிய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராட் ஹாக் பேசுகையில், “அதிரடி ஆட்டக்காரரான டிம் டேவிட்டிற்கு விரைவாக ஆஸ்திரேலிய அணியில் இடம் கொடுக்கப்பட வேண்டும். ஸ்மித்தின் பேட்டிங்கை ஆர்டரை மாற்றியமைத்து, ஸ்டோய்னிஸை ஐந்தாவது இடத்திலும், டிம் டேவிட்டை 6வது இடத்திலும் களமிறக்க வேண்டும். 6வது இடத்தில் களமிறங்க டிம் டேவிட் மிக சரியானவர், அவரை சரியாக பயன்படுத்துவதே ஆஸ்திரேலிய அணிக்கு பயன் கொடுக்கும். கடைசி ஓவர்களில் அவரால் அசால்டாக அதிகமான ரன்கள் குவிக்க முடியும். டிம் டேவிட்டிடம் தனித்திறமை உள்ளது, அதை உரிய நேரத்தில் பயன்படுத்தி கொள்வதே புத்திசாலித்தனம்” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.