ரஷ்ய விமான சேவை தடை இடைநிறுத்தம்!

ரஷ்யாவின் ஏரோப்ளோட் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று,, இலங்கையிலிருந்து வௌியேறுவதற்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியது.

கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரத்தை இன்று முன்வைத்து விடுத்த வேண்டுகோளைக் கருத்தில்கொண்டு நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை இடைநிறுத்தியுள்ளது.

ரஷ்ய ஏரோப்ளோட் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்றுக்கு இலங்கையிலிருந்து புறப்படுவதற்குக் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த விவகாரத்தால் இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் இராஜதந்திர மோதலும் ஏற்பட்டது. இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்துவதற்கு ஏரோப்ளோட் நிறுவனம் தீர்மானித்தது. அத்துடன், இலங்கைத் தூதுவரை அழைத்து ரஷ்யா அதிருப்தியையும் வெளியிட்டிருந்தது.

பிந்திய இணைப்பு

ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிற்கு, நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரினால் இன்று (06) தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து, நீதவான் ஹர்ஷ சேதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அயர்லாந்து நாட்டிற்கு சொந்தமான சேலேஸ்டியல் ஏவியேஷன் ட்ரேடிங் லிமிடட் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் விசாரணைகளின் போது, ரஷ்யாவின் ஏரோபுளோட் விமான சேவை நிறுவன விமானமொன்றை நாட்டை விட்டு வெளியேற, கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் கடந்த 2ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தடையுத்தரவை சவாலுக்கு உட்படுத்தி, சட்ட மாஅதிபர் திணைக் களத்தினால் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே, விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை ரத்து செய்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.