பலர் தொழிலை இழக்கும் அபாயம்.

இலங்கையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தொழிலை இழக்கும் அபாயம் காணப்படுகின்றது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்குப் போதுமானளவு வருமானம் இல்லாமை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, நாட்டின் பண வீக்கம் கடந்த மே மாதத்தில் 39 தசம் 1 வீதாமாக அதிகரித்துள்ளதி எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் பொருளாதார நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.