மீண்டும் மட்டமான தோல்வியடைந்த இந்திய அணி; ரசிகர்கள் கவலை !!

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் 40 ரன்களும், இஷான் கிஷன் 34 ரன்களும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்ததால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்பின் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹென்ரிக்ஸ் (4), ப்ரெடோரியஸ் (4) மற்றும் வாண்டர் டூசன் (1) போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டனான டெம்பா பவுமா 35 ரன்களும், இந்திய அணியின் பந்தை அசால்டாக சிதறடித்த ஹென்ரிச் கிளாசன் 46 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.2 ஓவரிலேயே இலக்கை மிக இலகுவாக எட்டிய தென் ஆப்ரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.