வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவை.

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் செய்து 2 டெஸ்ட் ,3 டி20,3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .

அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் ,ஜேடன் சில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது இதனால் 265 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது வெஸ்ட் இண்டீஸ் அந்த அணியில் கேப்டன் கிரேக் பிராத்வைட் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய வங்காளதேச அணியில் கேப்டன் ஷகிப் அல் ஹசன், நுருல் ஹசன் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். நுருல் ஹசன் 64 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 63 ரன்னும் எடுத்தனர். . இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 85 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச் 5 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 3விக்கெட்டும், கைல் மேயர்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜான் கேம்ப்பெல், பிளாக்வுட் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ரன்கள் தேவைப்படுகிறது .

Leave A Reply

Your email address will not be published.