இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ஓட்டங்களால் அபார வெற்றி.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 165 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1–0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவின் வெற்றியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதார் முக்கிய பங்கு வகித்தார். அவர் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக் கனவை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

முதலாவது இன்னிங்ஸில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை விளாசி இந்தியாவின் வலுவான ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

372 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இலங்கை அணி, இறுதியில் 206 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சோனல் தினுஷா 84 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.