சமூக ஆர்வலர் அனுருத்த பண்டார உட்பட 21 பேர் கைது (வீடியோ)

கொழும்பு ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டம் நடத்திய பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி முகத்திடலில் தங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் வந்து இரண்டு வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் லோட்டஸ் வீதியை மறித்து தடைகளை அமைத்திருந்தனர்.

நிதியமைச்சின் நுழைவாயிலையும் போராட்டக்காரர்கள் மறித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லோட்டஸ் சுற்றுவட்டத்தை அண்மித்த வீதி இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் காட்டுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.