அரச அடிமைகளே வாயை மூடுங்கள்; உங்களால் வீதியல் நடமாட முடியுமா? சபையில் சகட்டுமேனிக்குக் கிழித்தார் சஜித்.

“அரச அடிமைகளே இது அதியுயர் சபை. பொய்களை உளறாமல் உங்கள் வாய்களை மூடுங்கள்.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போது ஆவேசத்துடன் தெரிவித்தார்.

“உங்களால் வீதியல் நடமாட முடியுமா? மக்கள் முன் செல்ல முடியுமா? நாம் செல்வோம். மக்களோடு மக்களாக நாம் நிற்கின்றோம்” என்றும் அரச தரப்பினரைப் பார்த்து அவர் கூறினார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாடாளுமன்றத்தால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்? உங்களால் எரிபொருள், எரிவாயு, அரிசி கொடுக்க முடியுமா? உங்களுக்கு வெட்கம் இல்லையா? கொள்ளையடித்துக்கொண்டு மாறி மாறி ஆட்சி செய்கிறீர்கள். புதிய பிரதமர் வந்த பின்னர்தான் வரிசை யுகம் மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் 220 இலட்சம் மக்களைக் கொலைசெய்யப் போகின்றீர்கள்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.