உணவுப்பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நாடு எதிர்கொண்டுள்ள இன்றைய நிலையில் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள உணவுப்பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நேற்று 20.06.2022 திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விஷட கூட்டத்தின்போது பிரதேச செயலாளர் யூ.உதயசிறீதர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பிரதேசமானது பயிர்செய்கைக்கான நிலம் அற்ற பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் உணவுப்பாதுகாப்பு மேற்கொள்ள முடியுமான வழிகளை இனம்கண்டு உத்தியோகத்தர்களாகிய நாம் பொதுமக்களை வழிநடாத்தி அவர்களுக்கு பயிற்சியளித்து உணவுப்பயிர்களை மேற்கொள்ள வேண்டும்.

உணவுப்பாதுகாப்பு என்பது எவ்வித உணவுத்தட்டுப்பாடும் இன்றி வீடுகளில் உணவை பெற்று நிவர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

குறைந்த நிலப்பரப்பில் பயிர்செய்யக்கூடிய பயிர்களான மரவெள்ளி, வற்றாளை, மரக்கறிப்பயிர்களை பயிரிட முடியும்.

நெற்களஞ்சியப்படுத்தல் தொடர்பாகவும் பிரதேச செயலாளர் இக்கூட்டத்தின்போது விளக்கமளித்தார்.

நெல் தேவையானோர் பெயர் விபரங்களை தெரிவிக்குமாறும் கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்ததுடன் இவ்விடயத்தில் தேர்ச்சிபெற்றவர்கள் அனுபவம் உள்ளவர்களின் உதவிகளைப்பெற்றுக்கொள்ளுமாறும் உத்தியோகத்தர்கள் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.