மத்திய வங்கி ஆளுநரின் பதவிக் காலத்தை நீட்டிக்க பிரதமர் ஒப்புதல்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நந்தலால் வீரசிங்கவின் சேவை நீடிப்பு தொடர்பான கடிதம் ஏன் இதுவரை அனுப்பப்படவில்லை என ஜனாதிபதியின் செயலாளர் நேற்று (23) பிரதமரின் செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியிருந்தார். பிரதமரின் செயலாளர் உடனடியாக பிரதமருடன் கலந்துரையாடி ஒரு மணித்தியாலத்தில் ஜனாதிபதி செயலாளருக்கு நீடிப்பு கடிதம் இன்று (24) அனுப்பி வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 6 வருட காலத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்க மீண்டும் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்கவுக்கு பதிலாக தனக்கு நெருக்கமான ஒருவரை நியமிக்க வேண்டும் அல்லது தான் பிரதமர் பதவியிலிருந்து ஒதுங்குவேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தெரிவித்த போது ஜனாதிபதி , பிரதமர் ரணிலை விலகச் சொல்லியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.