வரவிருந்த எண்ணெய் கப்பல் வரவில்லை : சபுகஸ்கந்த மூடப்பட்டது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று (24) பிற்பகல் முதல் மூடப்படும் என சுத்திகரிப்பு நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சுத்திகரிப்பு நிலையத்தை ஒரேயடியாக மூட முடியாது என்று கூறிய அதிகாரி, இது முறையான மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயலாகும் என்றார் அவர்.

சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் தொடங்கும் நாளில் மேற்கொள்ள வேண்டும் என்றும், தொடர்ந்து செயல்பட கச்சா எண்ணெய் இல்லாததால் அதை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சுமார் ஏழு மாத காலத்தில் மூடப்பட்டது இது நான்காவது முறையாகும்.

இதேவேளை, 40,000 மெற்றிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலை ஏற்றிச் சென்ற கப்பல் இன்று (24) பிற்பகல் வரை இலங்கையை வந்தடையவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கப்பல் தொடர்பில் வினவியபோது, ​​’கப்பல் இன்னும் வரவில்லை’ என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த கப்பல் நேற்று காலை இலங்கையை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று (23) தெரிவித்தார்.

முன்னதாக, இன்று (24) கப்பலின் வருகையை அறிவிக்க முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.