கத்தார் தொண்டு நிறுவனத்திற்கு இலங்கையில் விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், கட்டார் அரசின் கீழ் இயங்கும் கட்டார் அறக்கட்டளை நிதியத்தை இலங்கையில் தடை செய்தது, இதற்குக் காரணம் அந்த நிதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பணம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

உலகமெங்கும் சர்ச்சையாக பேசப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், கட்டார் அரசின் தொடர்புடைய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட, இந்த கத்தார் அறக்கட்டளை நிதியில் இருந்து பணம் பெற்றதாகக் கூறி அவர் , கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கத்தார் தொண்டு நிறுவனம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமாகும், இந்த அபத்தமான குற்றச்சாட்டை இலங்கையின் பிரதான சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் முன்வைத்துள்ளன. அந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை ஏற்று அரபு நாடுகளுடன் இராஜதந்திர சிக்கலையும் மொட்டு அரசாங்கம் உருவாக்கியது.

எவ்வாறாயினும், தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கட்டார் அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியதுடன், இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.