அரசால் முடியாத ‘ஆப்’ ஒன்றை வவுனியா இளைஞன் துசிதரன் உருவாக்கியுள்ளார்.

காஞ்சனாவோ, அரசோ செய்ய முடியாத வேலையை வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் உருவாக்கியுள்ளார்!
எவரும் ஏமாற்ற முடியாதபடி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகிக்கக்கூடிய ‘ஆப்’ ஒன்றை உருவாக்கியுள்ளார்!

வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் பஞ்சலிங்கம் துசிதரன், எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கும் வகையில் புதிய ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் சுமார் மூன்று வாரங்களாக ‘ஆப்’ மூலம் எரிபொருள் முறையாக விநியோகிக்கப்படுவதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஒருவர் வாரத்திற்கு ஒரு முறை எரிபொருளைப் பெறலாம். அத்துடன் எரிபொருள் விநியோகத்தின் போது மோசடிகளை குறைக்க முடிந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

பிபிசி சிங்கள செய்தியிலிருந்து.

Leave A Reply

Your email address will not be published.