வங்காளதேச கிரிக்கெட் வீரருக்கு 10 மாதம் விளையாட தடை- ஐ.சி.சி. நடவடிக்கை.

கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.
வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அறிமுகமானார். இந்த நிலையில் ஷாஹிதுல் இஸ்லாம் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதிப்படி தனது மாதிரியை பரிசோதனைக்கு ஷாஹிதுல் இஸ்லாம் வழங்கியிருந்தார். அதில் தடை செய்யப்பட்ட குளோமிபென் என்ற மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்தது.

இதனால் அவருக்கு 10 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், ஐ.சி.சி. ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தின் பிரிவு 2.1-யை மீறியதற்காக வங்காள தேச வேகப்பந்து வீச்சாளர் ஷாஹிதுல் இஸ்லாம் 10 மாதங்களுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளது.
அவர் கவனக்குறைவாக மருந்து வடிவில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.