யாழில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் வெடிகொளுத்திக் கொண்டாட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் நகரில் இன்று வெடி கொளுத்தி வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து யாழ். நகரின் மத்திய பஸ் நிலையம் முன்பாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் வெடிகளைக் கொளுத்தி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.