கொழும்பில் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு.

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டது இராணுவம் : கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு.

கொழும்பு , காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகின்றது. ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றுள்ளனர்.
இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவே இவ்வாறு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இராணுவத்தினர் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ளனர், போராட்டகாரர்களை ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றியுள்ளனர்.

இதேவேளை, காலிமுகத்திடலில் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஈவிரக்கமற்ற தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த தேவையற்ற ஈவிரக்கமற்ற பலப்பிரயோகம் இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக அமையாது நாட்டின் கௌரவத்திற்கும் சர்வதேச அளவில் உதவியாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பல சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

விபரங்கள் இன்னமும் முழுமையாக கிடைக்காத போதிலும்நுவான் போபகே உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன.

அதிகாரிகள் அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும் அனைவரும் எங்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தவேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ளார்.

கொழும்பு , காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலக பகுதியை இராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்குள்ள போராட்டக்காரர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதேவேளை, ஜனாதிபதி செயலக பகுதிக்குள் பாதுகாப்பு பிரிவினர் நுழைந்துள்ளதாக போராட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாடளாவிய ரீதியில் பொது அமைதியை பேணுமாறு இராணுவத்தினருக்கு அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிபிசியின் பத்திரிகையாளர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார்.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டவேளை பிபிசியின் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியுள்ளனர்- ஒரு இராணுவவீரர் செய்தியாளரின் கையடக்க தொலைபேசியை பறித்து படங்களை அழித்தார் என பிபிசி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.