நீர்த்தேக்கத்தில் குதித்து மாணவி உயிர்மாய்ப்பு!
தலவாக்கலை – மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த மாணவி லிந்துலை – மிளகுசேனை தோட்டத்தில் வசித்து வந்த 19 வயதுடைய முத்துரத்தினம் ஜிலோனி எனத் தெரியவந்துள்ளது.
லிந்துலை – சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்று வரும் குறித்த மாணவி, இன்று தலவாக்கலை பகுதியில் உள்ள தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த வேளையிலேயே நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.