22ஆவது திருத்தச் சட்டமூலம் புதனன்று நாடாளுமன்றத்தில் – நீதி அமைச்சர் தகவல்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்வுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைத்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இதனை உறுதிப்படுத்தினார்.

கடந்த அரசின் காலப்பகுதியில் நீதி அமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ச 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.

இதற்கமைய அதனை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.