இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் 191-7.

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் களமிறங்கினர் இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்தது. 2-வது நாளான இன்று மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி 378 ரன்னில் ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் நசிம் ஷா, யாசிர் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து. கேப்டன் பாபர் ஆசம் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அணியில் அதிகபட்சமாக அகார் சல்மான் 62 ரன்கள் எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்துள்ளது. யாசீர் ஷா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். நாளை மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.