மே 09 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – மனித உரிமைகள் ஆணைக்குழு!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்டா கோ கம மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பொலிஸார் நட்டஈடு வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் , அமைதியான மக்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட போராட்ட இடத்தை சுற்றி கடமையில் ஈடுபட்டிருந்த சகல பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

மே 09 தாக்குதலின் பின்னர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் பொலிஸ் மா அதிபர் தவறியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.