வடக்கில் இருந்து இன்றும் அறுவர் தமிழகம் பயணம்.

இலங்கயில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடியால் இன்றும் 6 பேர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

இவர்களுள் இரு ஆண்கள், ஒரு பெண் மற்றும் 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

இன்று காலை சென்றடைந்தவர்களிடம் மரைன் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.