அண்ணன் ஸ்டாலின் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் – தமிழிசை வேண்டுகோள்

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் தியாக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.இதில் விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை கொண்ட கல் வெட்டு பதியப்படுகிறது. இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை கல்வெட்டுகளை பதித்தார்.சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா வீர சாவக்கர், திருநெல்வேலி வேலு நாச்சியார் ஆகியோரின் கல்வெட்டுகளை தமிழிசை சௌந்தரராஜன் பதித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் , இந்த தியாக சுவர் குழந்தைகளுக்கு தேச உணர்வை ஊட்ட வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த பிரதமர் கூறியுள்ளார். புதுச்சேரியில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த அரசு திட்டங்களை தீட்ட வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பாரதப்பிரதமர் வருவது மகிழ்ச்சி. ஆனால் எனக்கு ஒரு ஆதங்கம். போட்டிக்கான வரவேற்பு விளம்பரங்களில் பிரதமரின் படமில்லை.

தமிழகத்தைச் சார்ந்தவள் என்று மட்டும் அல்லாமல் இந்தியக் குடிமகன் என்ற வகையிலும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வில் பாரதப் பிரதமரின் படங்களை வைக்க வேண்டும் என்ற என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிரதமர் படங்களை வைக்க வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.