பஸ் மோதி இளைஞர் சாவு!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி மொறக்கொட்டாஞ்சேனை விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் இலங்கை போக்குவரத்துப் சபை பஸ் வீதியில் நடந்து சென்ற இளைஞர் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் நடந்து சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மாவடிவேம்பு, 2ஆம் பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய வேணுகோபலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.