கொழும்பில் மற்றுமொரு கொலை! (Video)

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவாவின் கூற்றுப்படி, நேற்று இரவு கடற்கரை பகுதியான , கொழும்பு  விவேகானந்த கந்த வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் அதே பகுதியில் வசித்து வந்த தரகர் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் சுந்தரம் அண்டனி பெர்னார்ட் (51) என்பவராவார்.

9mm துப்பாக்கியால்   தலை மற்றும் மார்பு பகுதியில் சுடப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே அவர் இறந்துவிட்டதாக   செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சிகாகோவில் நடப்பது போல இலங்கையில் ஒரு கொலை வீடியோ! இந்த கொலைகாரர்களுக்கு சட்டம் பொருந்தாதா? யார் இந்த கொலைகாரர்கள்? எப்படி இப்படி திறந்த வெளியில் வந்து சுட முடிகிறது?

Leave A Reply

Your email address will not be published.