முல்லையில் சாரணர்களுக்கு அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு!

முல்லைதீவு மாவட்டத்தின் செம்மலைமகா வித்தியாலயத்தில் சாரணர்களுக்கு சின்னம்சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எஸ். யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக
பழைய மாணவனும் UK வசிப்பிடமாகக் கொண்ட சாரண சீருடைகளை அன்பளிப்பாக வழங்கியவருமான அருணாசலம் ஜனார்த்தனன் அவர்களும்,சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட சாரண ஆணையாளர் அருட்தந்தை. N.Jameson Gnanaponrajah அவர்களும், மதிப்புறு விருந்தினராக கல்வி வலய சார்பாளர் ஞா. சுபாஜினி அவர்களும் கலந்து கொண்டனர்.

போர்க்கால சூழலைத் தொடர்ந்து கைவிடப்பட்ட சாரண அமைப்பு மீண்டும் இன்று 24 பெண் சாரணர்களுக்கும், 25 ஆண் சாரணர்களுக்கும் அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வுடன் மீள் உருவாக்கம் பெற்றுள்ளது.

சாரணீயத்தை மீள் ஆரம்பித்தல் நிக‌ழ்ச்சி திட்டத்தில் கரைதுரைப்பற்று கோட்ட பாடசாலைகளில் இரண்டாவது பாடசாலையாகவும் அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்காவது பாடசாலையாகவும் வரலாற்றில் தம்மை பதிவு செய்ததற்கு அதிபர் சாரண ஆசிரியர்கள், ஊக்குவித்த பழைய மாணவன் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

மேலும் இதன்போது தேசிய சாரணர் சேவை மாதத்தை முன்னிட்டு சேவை மாத அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டு தேசிய சாரணர் சேவை மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.