ராஜபக்சவின் எதிர்காலத்தை கிளர்ச்சியால் தீர்மானிக்க முடியாது – நாமல்.

“ஒரு கிளர்ச்சியினால் ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது எனவும், அவ்வாறானதிற்கு தான் இடமளிக்கப் போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.

கேள்வி – கடந்த காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததா? இல்லையெனில் அவர்களின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?

எனது தந்தையாராகட்டும், அநுரகுமார திஸாநாயக்கவாகட்டும், சஜித் பிரேமதாசவாகட்டும், டலஸ் அழகப்பெருமவாகட்டும், நம் அனைவரினதும் அரசியல் பயணம் மக்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்கப்படுகிறது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கிளர்ச்சியை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ஜனநாயக ரீதியிலான தேர்தலில் எம்மை வெற்றி பெறச் செய்யவோ அல்லது தோல்வியடையச் செய்யவோ மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட முறையில் போராட்டத்தை நடத்துவதில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில ஆலோசனைகளும் யோசனைகளும் மிகவும் பெறுமதியானவை. போராட்டத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், போராட்டக்காரர்கள் சிலருடன் எனக்கு பிரச்சனை இருக்கிறது.

ஆர்வலர்கள் எப்பொழுதும் எழுச்சியுடன் ஜனநாயக விரோதமாக அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், வன்முறையை பரப்ப முயற்சித்தால், தேசிய தொலைக்காட்சி அல்லது அரசு நிறுவனங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அந்த அரசாங்க சொத்தை கைப்பற்றுவது ஆர்வலர்களின் எண்ணமாக இருந்தால், இவ்வாறான செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகளை நாம் அங்கீகரிக்க முடியாது.

எனவே, ஜனநாயகத் தேர்தல் மூலம்தான் நம் அனைவரின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.”

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் நாமல் ராஜபக்ஷ இந்தக் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.