டெல்லியில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

ராகுல் காந்தியை டெல்லி காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, சசி தரூர் உள்ளிட்டோரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும், டெல்லியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மகளிர் அணியினரும் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராக காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.