உப்பளத்தில் கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் நல்லடக்கம்.

மன்னார் உப்பளத்தில் கொலை செய்யப்பட்ட யுவதியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது!

மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் சடலம் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று (24) திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய் மற்றும் வருகை தந்த குடும்ப உறவினர்களிடம் இன்றைய தினம் திங்கட்கிழமை (24) மாலை சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து வருகை தந்த குடும் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்ட நிலையில், குடும்ப உறவுகளின் நிலையை கருத்தில் கொண்டு மன்னார் மாவட்ட மாதர் ஒன்றிய பிரதி நிதிகள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று குடும்ப உறவுகளுக்கு பக்க பலமாக இருந்தனர்.

எனினும் சடலத்தை சொந்த இடத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியாத நிலையில் குடும்ப உறவுகள் தவித்த நிலையில், குறித்த யுவதி சடலமாக மீட்கப்பட்ட கடந்த 13 ஆம் திகதி முதல் குறித்த யுவதியின் மரணம் தொடர்பாகவும் மரணத்திற்காக நீதியை பெற்றுக்கொடுக்க செயல் பட்ட மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவியுடன் குறித்த சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மன்னார் பொது மாயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இளம் யுவதியின் மரணம் தொடர்பாக இளம் பெண்ணின் சகோதரி (வயது -30), அவரது பெரிய தாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.