வட கொரிய தலைவர் கோமா நிலையில் : அனைத்து அதிகாரங்களும் சகோதரி கிம் யோ-ஜாங்கிடம்

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது கோமா நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து கட்டுப்பாட்டையும் வட கொரிய தலைவர் தனது சகோதரி கிம் யோ-ஜாங்கிடம் ஒப்படைத்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம், வட கொரிய தலைவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று சில சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் மூன்று வாரங்களாக வரை அவரைக் காணவில்லை, அந்த நேரத்தில் அவர் இதய அறுவை சிகிச்சை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், மூன்று வாரங்களுக்குப் பிறகு மே மாதத்தில் அவர் பொது வெளியில் தோன்றினார் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் முதல் வட கொரிய தலைவர் கோமா நிலையில் இருப்பதாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மே மாதத்தில் அவர் பகிரங்கமாக தோன்றியது என்பது நாட்டின் அதிகாரிகளின் புரளி.

இப்போது 36 வயதான கிம் ஜாங் உன் 2011 இல் வட கொரியாவின் தலைவரானார். அவரது தந்தை கிம் ஜாங் இல் இறந்த பின்னர் அவர் தலைவரானார்.

Leave A Reply

Your email address will not be published.