ஸ்ரீமதி மரண வழக்கு! நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள விவகாரம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம்.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவி ஸ்ரீமதியின் மரணம் குறித்து நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்வழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள், 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஒப்பிட்டு மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

இதனால் இதுகுறித்து விசாரணை நடத்தும் வழக்கறிஞர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.