மின் கட்டணத்தை உயர்த்த தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மனு.. இன்று விசாரணை

மின் கட்டண உயர்வுக்கு தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்ந்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டுமே உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் இல்லை. எனவே,

அவரை நியமிக்கும் வரையில் மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க கூடாது எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி G.R. சுவமிநாதன், முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தொழில்நுட்ப உறுப்பினர் இந்தாண்டு மார்ச் 17இல் ராஜினாமா செய்தார். சட்டத்துறை உறுப்பினர் இந்தாண்டு மே 5இல் ஓய்வு பெற்றார். இரு காலியிடத்தை அரசு ஒரே நேரத்தில் நிரப்பியிருக்கலாம். ஆகவே, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டத்துறை உறுப்பினர் நியமிக்கும் வரை தமிழ்நாடு மின்வாரியம் அளித்த மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.