பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன கைது! (Video)

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத உயனவுக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் விசேட பொலிஸ் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

கோட்டா கோ கம போராட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்திருந்த செயற்பாட்டளர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன, இன்றையதினம் இடம்பெற்ற போராட்டமொன்றிலும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாவதற்கு சற்று முன் …

தமிதா அபேரத்ன பொலிஸாரால் கைது

Leave A Reply

Your email address will not be published.