இலங்கையிலிருந்து நோர்வே செல்கிறது! தூதரகம் மூடப்படுகிறது!

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட ஐந்து வெளிநாட்டு தூதரகங்களை மூட நோர்வே வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பிரட்டிஸ்லாவா (ஸ்லோவாக்கியா), கொழும்பு (இலங்கை) மற்றும் பிரிஸ்டினா (கொசோவோ), மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோ தூதரகம் மற்றும் ஹூஸ்டனில் (அமெரிக்கா) உள்ள துணைத் தூதரகங்கள் மூடப்படும் என்று வெளியுறவு அமைச்சர் அன்னிகன் ஹுட்ஃபெல்ட் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொசோவோ, மடகாஸ்கர், ஸ்லோவாக்கியா மற்றும் இலங்கையுடனான நோர்வேயின் இராஜதந்திர உறவுகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் கையாளப்படும், மேலும் இதற்கான பொறுப்பு அருகிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு மாற்றப்படும் அல்லது அந்தந்த நாட்டிற்கு நோர்வேயில் உள்ள தூதுவர் நியமிக்கப்படுவார்.

Leave A Reply

Your email address will not be published.