நாமல், ஜீவன் உட்பட 12 பேருக்கு அமைச்சுப் பதவி?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்படவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ச, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, ஜனக பண்டார தென்னக்கோன், எஸ்.பி.திஸாநாயக்க, விமலவீர திஸாநாயக்க, சரத் வீரசேகர, எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்மொழிந்துள்ளது.

ஏனைய கட்சிகளில் இருந்து ஜீவன் தொண்டமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா (தேசிய காங்கிரஸ்) ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.