கடலில் மூழ்குபவரைக் காப்பாற்ற ரோபோ படகு – விசாகப்பட்டினம் மாநகராட்சி அசத்தல்

பெருநகர விசாகப்பட்டினம் மாநகராட்சி கடலில் மூழ்கியவர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் புதிதாக பேட்டரி மூலம் இயங்கும் ரோபோ படகை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த பேட்டரி மூலம் இயங்கும் ரோபோ படகு ஒரு உயிர் காப்பு மிதவையாகப் பயன்பட்டு கடலில் மூழ்குபவரைக் காப்பாற்ற உதவும். மேலும் இந்த ரோபோ படகு 5 அல்லது 6 வினாடிகளில் 30 மீட்டர் பரப்பளவு வரை உள்ளடக்கும் திறன் உடையது.

விசாகப்பட்டினம் கடலில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 30 ஆக உள்ளது. இந்த மாதிரியான அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தற்போது இந்த ரோபோ படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மல்லிகார்ஜுன, மாநகராட்சி ஆணையர் லக்ஷ்மிஷா மற்றும் விசாகப்பட்டினம் மேயர் இணைந்து பேட்டரி மூலம் இயங்கும் ரோபோ படகை ஆய்வு செய்தனர். மேலும் அவர்களுக்கு இதனின் ஒத்திகை செய்கை செய்து காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மல்லிகார்ஜுன விசாகப்பட்டினத்தின் கடல் பகுதியின் பாதுகாப்பானதாக மாறும் என்றார். மேலும் பேட்டரி மூலம் இயங்கும் ரோபோ படகு 7 கி.மீ வேகத்தில் 700 மீட்டர் வரை சென்று கடலில் மூழ்குபவரை உடனடியாக காப்பாற்ற உதவும் எனக் கூறினார்.

அதனை அடுத்து விசாகப்பட்டினம் பெருநகர மாநகராட்சி ஆணையர் லக்ஷ்மிஷா பேசுகையில் விசாகப்பட்டினத்தில் உள்ள இதர கடல்களில் ராம கிருஷ்ணா கடல் பகுதி ஆழமானது. மேலும் இங்குக் கடலில் இழுத்துச் செல்லப்பட்டவர்களைக் காப்பாற்றும் வகையில் ட்ரோன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.