சாஜஹானை பின் பற்றுகிறாரா ரணில்

சர்வதேச விருதை வென்ற இலங்கையின் முதல் நடிகை மாலினி பொன்சேகா.

அதன் பிறகு அனோஜா வீரசிங்க, நீட்டா பெர்னாண்டோ போன்ற நடிகைகளும் சர்வதேச விருதுகளை வென்றனர்.

இவர்கள் அனைவரும் 70 முதல் 80 வரையிலான பழைய தலைமுறை நடிகைகள்.

சர்வதேச விருது பெற்ற புதிய தலைமுறை நடிகை தமிதா அபேரத்ன.

1978 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மாலினி கௌரவ சான்றிதழை வென்றார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அனோஜா வீரசிங்க வென்றார்.

அதன் பிறகு, புதிய தலைமுறை நடிகை தமிதா அபேரத்னே சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

2004 இந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் ‘சுலங் கிரில்லி’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

2004 ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற சர்வதேச விருது விழாவிலும் தமிதா அதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார்.

இலங்கைக்கு சர்வதேச அளவில் புகழ் பெற்றுத்தந்த புதிய தலைமுறை நடிகை தமிதா.

இந்த புதிய தலைமுறை சமீபத்தில் காலிமுகத்திடலில் அரகலய போராட்டத்தை தொடங்கியபோது, ​​அந்த போராட்டத்தில் தமிதா ஒரு முக்கிய நபராக இருந்தார்.

அவர் மட்டுமல்ல இலங்கையில் இருந்து பல கலைஞர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சில கலைஞர்கள் செல்ஃபி எடுத்து முகப்புத்தகத்தில் போட்டு பிரபலமடைந்தனர்.

ஆனால் கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிதா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி கோத்தபாயவை வீட்டுக்கு அனுப்பிய பின் , ரணில் ஜனாதிபதியாவதையும் தமிதா எதிர்த்து நின்றார்.

ரணில் ஜனாதிபதியானதும் , ரணிலையும் வீட்டுக்குப் போகுமாறு தமிதா அச்சமின்றி குரல் எழுப்பினார்.

ரணில் ஜனாதிபதியாகி போராட்டத்தை அடக்கியபோதும் தமிதா அஞ்சாமல் போராட்டத்திற்காக நின்றார்.

செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு எதிராக, கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்  கைது செய்யப்பட்டார்.

தமிதா கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்படும்போது, ​​பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 37 பேருக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.

கைது செய்யப்படுவதற்கு முன் தமிதா பங்கேற்ற போராட்டத்தின் போது , தமிதா ஒரு அற்புதமான கதையை சொன்னார்.

ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்த் என அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவின் சிறகுகளைப் பெற்றோர் போல் பறக்க முயல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்த திருடர்களை துரத்த  மக்கள் போராடினார்கள்.
இந்த மோசடி முறைக்கு எதிராகவும் மக்கள் போராடினார்கள்.

இன்று மக்கள் வாழ முடியாத அளவுக்கு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தாய்மார்களால் பால் பவுடர் வாங்கக் கூட பணம் இல்லை. இந்த கேவலமான அரசியல்வாதிகள் மக்களின் வலியை உணர்வதில்லை. நாம் வெற்றி பெற்ற போராட்டத்தை காக்காவிட்டால், இந்த திருடர்களும், மோசடி கும்பலும் மீண்டும் வந்து அந்த நாற்காலிகளில் அமர்வார்கள்…’

அவர் இதனைத் தெரிவிக்கையில், அதற்கு அடத்த நாள் பதவியேற்கவுள்ள இராஜாங்க அமைச்சர்களின் பட்டியல் ஜனாதிபதி செயலகத்தில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்திருக்கும். தமிதாவால் மோசடிக்காரர் என்று கூறப்பட்ட சனத் நிஷாந்தவின் பெயரும் அந்த பட்டியலில் இருந்தது.

‘யார் இந்த சனத் நிஷாந்த…?’

கடந்த மே மாதம் 08 ஆம் திகதி காலிமுகத்திடல் போராளிகள் மீது தாக்குதல் நடத்த குண்டர்களுடன் வந்த பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த. அவரைக் கைது செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய அவரை கைது செய்தார்.

‘கோட்டாவால் கைது செய்யப்பட்ட சனத் நிஷாந்தவிற்கும்  ரணில் அமைச்சு பதவி கொடுப்பாரா…?’

ரணில் ஜனாதிபதியாக கையொப்பமிட்ட ஆவணத்தின் கையெழுத்து மை காய்வதற்கு முன்பே ராஜாக்ஷவினரது குப்பை வண்டியை இழுக்க ரணிலை ஜனாதிபதியாக்கியது என   ‘ஞாயிறு அலசல்’ சுட்டிக் காட்டியது.

ராஜபக்சக்கள் இனிமேல்  சுதந்திரமாக அரசியல் செய்ய வேண்டும் என்றால் போராட்டத்தை ஒடுக்க வேண்டும். அந்த வேலையையே  ரணிலிடம் இருந்து ராஜபக்சேக்கள் முதலில் எதிர்பார்த்தார்கள்.

ராஜபக்சவினர் நேரடியாக போராட்டத்தை அடக்க முயன்றால் , ஒட்டுமொத்த ராஜபக்ச தலைமுறையும் இல்லாமலே போவார்கள் என தெரிந்துதான் ரணிலிடம் அந்த கண்டிராக்டை கையளித்தனர்.

அந்த கண்டிராக்டை ரணில் அச்சு பிசகாமல் நிறைவேற்றி வருகிறார்.

அது எப்படி நடந்தது என்றால் ,

போராட்டத்திற்கு பயந்த ராஜபக்சவினர் , முதலில்  ராஜபக்ச என்ற பெயர் கொண்ட அனைவரையும் அமைச்சர் பதவியை விட்டு வெளியேறுமாறு கோட்டாபய கேட்டுக் கொண்டார்.

இப்போதுதான்  ரணில் போராட்டத்தை அடக்கிவிட்டு , ஷசீந்திர ராஜபக்சவை இராசாங்க அமைச்சராக நியமித்துள்ளார்.

இதுதான் ராஜபக்சேக்கள் மீண்டும் சுதந்திரமாக அரசியல் செய்ய முடியும் என்று ரணில் கொடுத்த முதல் உத்தரவாதம்.

பியல் நிஷாந்த , ராஜபக்சவினரது ஆள். பியல் நிஷாந்த ராஜபக்சவின் அரசியலின் அடையாளம்.

ராஜபக்சேவை பாதுகாக்கும் மெய்ப்பாதுகாவலர்களை காக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக ரணில் , பியலுக்கு அமைச்சு பதவியை கொடுத்ததன் மூலம் காட்டுகிறார்.

பியல் நிஷாந்தவுக்கு இராசாங்க அமைச்சுப் பதவி வழங்கி, தமித அபேரத்னாவை கைது செய்ததன் மூலம், ராஜபக்சவுக்கு எதிராகவும், ராஜபக்சவின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் வாய் திறக்கும் எவரையும் சும்மா விடமாட்டேன் என்பதை ரணில் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள தாஜ்மஹால்.

இது சாஜஹான் மன்னரால் இறந்த தனது அன்பு மனைவிக்காக கட்டப்பட்ட அரண்மனையாகும்.

இந்த அரண்மனையைக் கட்ட மன்னர் , திறமையான கட்டிடக் கலைஞர்களின் உதவியைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. ஆனால் அரண்மனை கட்டப்பட்ட பிறகு, மன்னர் சாஜஹானுக்குள் ஒருவித பயமும் சந்தேகமும் ஏற்பட்டது, அந்த பயத்திற்கு காரணம் தாஜ்மஹாலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்கள் தனக்குப் பிறகு  வரும் மன்னர்களுக்கு இதுபோன்ற அரண்மனைகளைக் கட்ட உதவுவார்கள் என்பதாகும்.

தாஜ்மஹாலை விட அற்புதமான வடிவமைப்புகளை உருவாக்க தாஜ்மஹாலைக் கட்டிய அதே கட்டிடக் கலைஞர்கள் தனக்குப் பிறகு ஆட்சி செய்யப்போகும் மன்னர்களும் பெறுவார்கள் என்று அவர் பதற்றமடைந்ததாக இந்திய வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். மற்றொரு தாஜ்மஹால் பிறக்கக்கூடாது என்பதற்காக தாஜ்மஹாலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களின் விரல்களை மன்னர் வெட்டியதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

‘ரணில் போராட்டக்காரர்களை அடக்குவது …ஷாஜஹான் தாஜ்மஹாலை கட்டிய கட்டிடக் கலைஞர்களின் விரல்களை வெட்டியதைப் போலவா ?’

தனக்காகக் கட்டப்பட்ட தாஜ்மகாலை மீண்டும் கட்டாமல் கட்டிடக் கலைஞர்களின் விரல்களை சாஜஹான் வெட்டியதைப் போல, தன்னை ஜனாதிபதியாக்கிய போராட்டக்காரர்கள் , தனக்கு எதிராகவும் போராடி இன்னொரு புதிய ஜனாதிபதியை நியமிக்கலாம் என ரணில் போராட்டத்தை ஒடுக்குகிறாரா என சந்தேகமாக உள்ளது.

இந்த தாஜ்மஹாலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களின் விரல்களை வெட்டிய கதையை முதலில் சொன்னவர் ரணில்தான்.

அது சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில்.

சந்திரிக்கா , ஊடகங்களை அடக்கிய போது, ​​சந்திரிகா சாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களின் விரல்களை வெட்டியதைப் போல, சந்திரிகாவை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் இன்னொரு ஜனாதிபதியை கொண்டு வந்து விடுவார்களோ என்ற பயத்தில் அடக்கப்படுகிறார்கள் என்று ரணில் கூறினார்.

உபுல் ஜோசப் பெர்னாண்டோ
தமிழில் : ஜீவன்

Leave A Reply

Your email address will not be published.